No results found

    ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள தயார் - அமீர்


    டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளரும் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    டெல்லியில் இருந்து உணவுப் பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவது போல ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பது அம்பலமானதை அடுத்து அவர் மீதான பிடி இறுகியது.

    இந்நிலையில், ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குனர் அமீர் ஆஜராக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.

    அதில், வரும் 2ம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அளித்துள்ள சம்மன் தொடர்பாக இயக்குனர் அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள தயார். கொஞ்சமும் தயக்கமில்லாமல், என் தரப்பிலிருக்கும் உண்மையையும், நியாயத்தையும் எடுத்து சொல்வேன்" எனவும் தெரிவித்துள்ளார். 100 சதவிகிதம் வெற்றியோடு இறைவன் அருளால் வருவேன் என அமீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ஜாபர் சாதிக் தயாரித்த படத்தை, அமீர் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال